;
Athirady Tamil News

உயர் பட்டக் கல்வித் தகைமை; தவறிய காரணத்தினால் பதவி நீக்கம்!!

0

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் ஒருவர் பல்கலைக்கழக தாபன விதிக் கோவைக்கு அமைய உயர் பட்டக் கல்வித் தகைமையை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவு செய்யத் தவறிய காரணத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பல்கலைக் கழக பேரவையினால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக் கழகப் பேரவையிலேயே இவ்வாறு தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் ஒருவர் உரிய காலப் பகுதியினுள் உயர்கல்வித் தகைமையைப் பூர்த்தி செய்திருந்த போதிலும், அது பற்றிய தேவைப்பாடுகளைப் பல்கலைக் கழக தாபனக் கிளை நிறைவேற்றத் தவறியதனாலேயே, சமர்பிக்கப்பட்ட பேரவைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக பேரவை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதேபோலவே, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் ஒருவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், பல்கலைக் கழக மேன்முறையீட்டு சபையில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளின் பின் குறித்த விரிவுரையாளருக்கு சம்பளத்துடன் மீள் நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*