அரசியல் தேவைக்காக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவது நாட்டின் சட்டமாக இருக்க முடியாது !!

சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை விடுதலை செய்வது தொடர்பில் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
அததெரண தொலைக்காட்சியில் நேற்று இரவு நடைபெற்ற 360 நிகழ்ச்சில் கலந்துக்கொண்ட போதே அவர் இது குறித்து விளக்கமளிம்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் அரசியல் தேவைக்காக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவது நாட்டின் சட்டமாக இருக்க முடியாது என தெரிவித்தார்.
புலனாய்வு அதிகாரிகளும், இராணுவத்தினரும் தவறிழைத்ததாக தற்போதை அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் கடற்படை தளபதி மீதும் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைக்க முயற்சிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தான் நன்கு அறிந்துள்ளதாகவும் அவை அனைத்தும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எனவும் ஆகவே அவர்களை ஏன் விடுவிக்க வில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பொலிஸ் மா அதிபரால் சட்டம் தேவைக்கு ஏற்றால் போல் வலைக்கப்படுவதாக தெரிவித்த அவர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள இரண்டு உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் இதனை அரசியல் தேவை கருதி செய்யதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் தனக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு அமையவே சில விடயங்களை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக FCID பிரிவின் தலைவர் தெரிவித்தாக கூறிய அவர், அதுவா சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் எனவும் கேள்வி எழுப்பினார்.
அதுவா சட்டவாக்கம் என கேள்வி எழுப்பிய அவர், இன்று சட்டவாக்கம் சிறையில் அடைப்பதை முதமையாக கொண்ட ஒன்றாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
அரசியல் செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்குவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என கேள்ளி எழுப்பிய அவர் அதுவா சட்டவாக்கம் எனவும் கேள்வி எழுப்பினார்.
எனவே, அவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்யும் போது, அவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதை தவிற வேறு வழியில்லை என பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.