;
Athirady Tamil News

சத்திய கடதாசி வழங்க தயாராகவுள்ள மனுச நாணயக்கார !!

0

சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதில்லை என்ற நிபந்தனைக்கு இணங்குவதாகவும், அந்த நிபந்தனையை மீறினால் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு ஏதுவான வகையில் சத்திய கடதாசி ஒன்றை வழங்குவதாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான தில்ஸான் பத்திரன சவால் ஒன்றை விடுத்திருந்தார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஸ நாணயக்கார மேற்குறித்த உறுதி மொழியை வழங்க தயார் என தெரிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

´சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதில்லை என்ற நிபந்தனைக்கு இணங்குகின்றீர்களா என ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான தில்ஸான் பத்திரன கேட்டிருந்தார்.

ஆம். நாம் புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய போவதில்லை. அதேபோல் இனவாத கருத்துக்களை தெரிவிக்காமல் இருக்க உங்களால் முடியுமா? என நான் அவரிடம் வினவியிருந்தேன்.

ஆம் முடியும். இனவாதத்தை தோற்றுவிக்கும் எந்த கருத்துகளையும் நான் தெரிவிக்க மாட்டேன் என தெரிவித்த அவர். அதேபோல் தேர்தலின் பின்னர் கட்சி மாறுவீர்களா? என என்னிடம் வினவியிருந்தார்.

ஆம். நான் தொடர்ந்தும் சஜித் பிரேமதாசவுடனேயே இருப்பேன். அவரின் ஆட்சியில் அமைச்சர் பதவிக்கான சம்பளத்தை பெற மாட்டீர்களா என கேட்டிருந்தார்.

எனக்கு அமைச்சர் பதவிக்கான சம்பளம் வேண்டாம். எனினும் வாழ்க்கைச் செலவிற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சம்பளத்தை மாத்திரம் பெறுவேன்.

ஆகவே மேற்சொன்ன உறுதிமொழிகளை மீறினால் வழக்கு தாக்கல் செய்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதாக உறுதி மொழி ஒன்றை வழங்க முடியுமா என அவர் என்னிடம் வினவியிருந்தார்.

ஆம். இரண்டு நாட்களுக்குள் தில்ஸான் பத்திரனவிற்கு எனது சத்திய கடதாசியை கையளிப்பேன். சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இவ்வாறான தூய்மைமிகு அதேபோல் எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொள்ள கூடியவர்களே இருப்பதாகவும் நான் தெரிவித்துக் இதன்போது கொள்கின்றேன் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 2 =

*