கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதி..!!!

கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.