;
Athirady Tamil News

மகரவிளக்கு வழிபாடு 17-ந்தேதி தொடங்குகிறது: சபரிமலையில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு..!!

0

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன்கோவில் புகழ் பெற்றது. இங்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து, வழிபடுகிறார்கள்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் மகர விளக்கு வழிபாடு 2 மாதங்கள் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு, மகர விளக்கு வழிபாடு வரும் 17-ந்தேதி தொடங்குகிறது.

இதையொட்டி 5 கட்டங்களாக சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், அதன் சுற்றுபுறங்களிலும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதுபற்றி கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா, திருவனந்தபுரத்தில் நேற்று கூறுகையில், “இந்த ஆண்டு சபரிமலை சீசனில் பாதுகாப்பு கடுமையானதாக இருக்கும்” என குறிப்பிட்டார்.

இதையொட்டி டி.ஜி.பி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 24 போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உதவி சூப்பிரண்டுகள், 112 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 264 இன்ஸ்பெக்டர்கள், 1,185 சப்-இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் இடம் பெறுவர்.

* கோவிலிலும், கோவில் வளாகத்தை சுற்றிலும் 8,402 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அவர்களில் 307 பேர் பெண் போலீசார் ஆவர்.

* முதல் கட்டமாக வரும் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 2,551 பேர் சன்னிதானத்திலும், பம்பை, நிலக்கல், எருமேலி, பத்தணம்திட்டாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

சபரிமலை ஐயப்பன்கோவில் மகர விளக்கு சீசன் தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கடந்த வாரம் பல்வேறு துறை அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது நினைவுகூரத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தினர்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. அந்த அமர்வுக்கு தலைமை வகித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அதற்குள் இந்த வழக்கிலும் தீர்ப்பு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + fourteen =

*