;
Athirady Tamil News

நோய்வாய்ப்பட்ட பிக்குமார்களுக்காக மத்திய நிலையம் !!

0

நோய்வாய்ப்பட்ட பிக்குமார்களுக்காக நாடு பூராகவும் ´நோயாளர் பிக்குமார் மத்திய நிலையம்´ ஒன்றை ஆரம்பித்து நோய்வாய்ப்பட்ட பிக்குமார்களுக்கு இலவசமாக வைத்திய சிகிச்சை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதேபோல், நிதி நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட வைப்பாளர்களுக்கு நிவாரணம் ஒன்றினை வழங்குவதற்காக, வீழ்ச்சியடைந்த நிதி நிறுவனங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (12) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்த கூட்டதின் போது, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் பந்துல செனவிரத்ன, உடுநுவர பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மதுசங்க குருப்புஆராய்ச்சி, கண்டி மாநகர சபை உறுப்பினர் இம்தியாஸ், அக்குரணை பிரதேச சபை உறுப்பினர் அஸ்வர் மற்றும் பல பிரதேச சபை உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 13 =

*