;
Athirady Tamil News

அமைதி காக்கும் படையில் கடமையாற்ற 243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு!!

0

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்காக 243 இராணுவத்தினர் இன்று (13) அதிகாலை மாலி நாட்டை நோக்கி புறபட்டு சென்றுள்ளனர்.

விஜயபாஹூ காலாட்படைப்பிரிவின் மருத்துவம், பொறியியல் மற்றும் சேவைப் படையணியின் இருபது அதிகாரிகளும், மேலும் 223 படையினரும் அங்கு சென்றுள்ளனர்.

இவர்களை ஏற்றிச்செல்வதற்காக எத்தியோப்பியன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767- 300 விமானங்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பியது.

இந்த விமானம் இன்று அதிகாலை 3.20 அளவில் மாலி இராச்சியத்தை நோக்கி சென்றுள்ளது.

இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வில் இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பல உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*