பந்தை சேதப்படுத்திய வீரருக்கு தடை !!

ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த போட்டியின்போது மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய போது, நிக்கோலஸ் பூரன் பந்தை பளபளப்பாக்க தொடைப்பகுதியில் தேய்த்தார். அப்போது கை பெருவிரலால் பந்தின் மேற்பகுதியை சேதப்படுத்தினார்.
இது கேமராவில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இதனால் பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது நடுவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய நடுவர்கள் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளனர். இதனால் அடுத்த நான்கு ரி20 போட்டிகளில் அவர்களால் விளையாட இயலாது.