தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றதாக மாறியுள்ளன!!

எதிர்வரும் நாட்களிலும் தமக்கு எதிராக சிலர் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக கடந்த ஐந்து வருடங்களில் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றதாக மாறியுள்ளதை உறுதியாக கூறிக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹோமாகம பகுதியில் நேற்று மாலை (13) இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.