;
Athirady Tamil News

ரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்!!

0

ரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர் யார் என்பதை உணர்திய தலைவன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலி சமோதா மண்டபத்தில் இன்று (13) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ரோஹண விஜேவீர என்பவரே எமது நாட்டின் சிரேஸ்ட அரசியல்வாதி என போற்றப்படுபவர்.

அவர் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 30 வருடங்களாகின்றன.

அவருடன் எமது ஆயிரகணக்கான சகோதர சகோதரிகள் ஐ.தே.க ஆட்சியின் போது கொலை செய்யப்பட்டனர்.

அவர்களின் நினைவுகள் எப்போதும் எம் நெஞ்சங்களில் உள்ளன.

அன்று இந்திய இராணுவம் வந்து எமது நாட்டை ஆக்கிரமித்தது. இன்று அவ்வாறான நிலைமை இல்லாத போதும் பல்வேறு வகையாக அச்சுறுத்தல்களை நாடு சந்தித்துள்ளது.

ஆனபடியால் அன்றும் இன்றும் ஒரே நிலைமைதான் காணப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் முக்கிய பகுதி, ஹம்பாந்தோட்ட துறைமுகம், திருகோணமலை எண்ணய் குதங்கள் சிலவை ஆகியன இன்று வெளிநாட்டுக்கு விற்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டின் பொருளாதார கேந்திர நிலையங்கள் பல வெளிநாடுகளின் கைகளில் உள்ளது. இந்த இரு தரப்பினரும் இணைந்து நாட்டின் சொத்துகளை வெளிநாட்டுக்கு விற்றதை மாத்திரமே செய்தார்கள்.

எமது நாட்டை பலமிக்க வெளிநாடுகளிடம் அடிப்பணிய வைக்கும் பல ஒப்பந்தங்களில் இவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

இன்னும் பல உடன்படிக்கைககளில் கைச்சாத்திடுவதற்கு இணங்கியுள்ளனர். இவற்றின் மூலம் முன்பைவிட எமது நாட்டின் சுயாதீனதன்மை மற்றும் இறைமை ஆகியன வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

தேசிய சொத்துக்கள் பலவற்றை பல்துறை நிறுவனங்களுக்கு இவர்கள் விற்றுள்ளனர். ராஜபக்ஷவின் காலத்தில் பாரிய நிலபரப்பு அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.

கல்பிட்டிய தீவுபகுதியையும் அவர்கள் விற்றார்கள்.

1988 – 89 ஆண்டுகளில் இடம்பெற்ற போராட்டம் வெளிநாடுகளுக்கு நிலங்களை விற்பதற்கும், அப்போதய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒடுக்கு முறைகளுக்கும் எதிரானது.

இன்றைய நிலைமையில் அந்த போராட்டத்தின் மறு வடிவத்தை எம்மால் முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் சொத்துக்களை விற்றவர்களே இன்று தம்மை தேசபற்றாளர்கள் என கூறிக்கொள்கின்றனர். உண்மையான தேசப்பற்றாளர் யார் என்பதை ரோஹண விஜேவீர சகோதரர் எமக்கு காண்பித்துள்ளார்.

எமது கட்சி உள்ளிட்ட தொழிற்சங்கத்தை முடக்குவதற்கு இன்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

துறைமுகம் விற்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்த எமது தொழிற்சங்க பிரதிநிதிகளை ரணில் அரசாங்கம் துரத்தி, துரத்தி அடித்தது.

ஜனநாயம் தொடர்பான போராட்டம் அன்றைவிட இன்று மேலோங்கியுள்ளது.

ரோஹண விஜேவீர சகோதரரின் செயற்பாடுகளையும், குணாம்சம்களையும் எமது வாழ்வில் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டை ஆட்சி செய்த இரு தரப்பினரும் வரலாற்றில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்.

அன்று எமது சகோதரர்கள் இந்த இரண்டு தரப்பினருக்கும் எதிராகவே போராடினார்கள்.

அவர்கள் தமது உயிர்களையும் தியாகம் செய்தது மக்களுக்காகவே…

அவர்களின் கொள்கைகளை பின்பற்றி தர்மசீலர்களாக வெற்றியை சுதந்தரித்துக்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்´ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − five =

*