;
Athirady Tamil News

மகனை காப்பாற்ற கணவரை கொலை செய்த பெண் – வாழைச்சேனையில் சம்பவம்!!

0

வாழைச்சேனை கண்ணகிபுரம் பகுதியில் தனது கணவனை தடியொன்றினால் தாக்கி பெண் ஒருவர் கொலைச் செய்துள்ளார்.

கணவன், மனைவி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கும் இடையிலான வாய்தர்க்கத்தின் போது தனது மகனை கூரிய ஆயுதமொன்றில் தாக்க கணவன் முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த குறித்த பெண் கணவனை தடியொன்றினால் தாக்கி கொலை செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த கணவன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

36 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், 16 வயதான மகன் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபரான குறித்த பெண்ணை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − nineteen =

*