;
Athirady Tamil News

தேர்தல் அமைதி காலத்தை மீறுவது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம்!!

0

எதிர்வரும் தேர்தல் அமைதி காலத்தினுள் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியினுள் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவற்றை வீடியோ பதிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களை குறித்த வீடியோவில் இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

தேர்தல் அமைதி காலத்தை மீறுவது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 18 =

*