;
Athirady Tamil News

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

0

வெல்லவாய, எதிலிவெவ, மீகஸ்அராவ, புபுதுவெவ பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

41 வயதுடைய நபர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே வீட்டில் வசித்து வரும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட காணி தகராறு முற்றியதில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளின் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபரின் மனைவியின் சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + nineteen =

*