யாழ் மாவட்டத்தில் 40 தேர்தல் முறைப்பாடுகள்!

யாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில், 40 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
தேர்தல் விதிமுறை மீறல்களோ , வன்முறை சம்பவங்களோ பாரியளவில் எதுவும் நடைபெறவில்லை. விதிமுறைகள் மீறல்கள் தொடர்பில் 40 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, சுவரொட்டி ஓட்டியமை , பதாகைகளை காட்சிப்படுத்தியமை போன்றவை தொடர்பில் கிடைக்கப்பெற்றன. அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதேவேளை தேர்தல் காலங்களில் இடமாற்றம் வழங்கப்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன அவை தொடர்பிலும் நடவடிக்கைகளை எடுத்தோம்.
அமைதியாகவும் சுமூகமாமாவும் தேர்தலை நடாத்துவதற்கு பொலீசார் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். அனைவரது ஒத்துழைப்புடன் யாழில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த முடியும் எனும் நம்பிக்கை எமக்குண்டு என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
போராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற்று முன் கைது!! (படங்கள்)