;
Athirady Tamil News

தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!!

0

தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரகொட்டியான பகுதியில் தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (14) அப்பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்று துண்டுப்பிரசுரங்களை பகிர்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 155 துண்டுப்பிரசுரங்களும், 30 கடித உறைகளும் மோட்டார் சைக்கிளும் பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

வீரகொட்டிய பகுதியை சேர்ந்த பாடசாலை ஒன்றில் காவலாளியாக கடமையாற்றும் 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 6 =

*