;
Athirady Tamil News

டென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் – நவ.17-1950..!!!

0

ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். ஜூலை 6, 1935-ல் பிறந்தார். இவர் 1950-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி தலாய் லாமா-ஆக பதிவி ஏற்றார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார்.

இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார். இவரே திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், திபெத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ள வில்லை. 1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் தரம்சாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்கிறார்.

இவர் ஆன்மீகம் அரசியல் துறைகளில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். ஆன்மீகத்தை அறிவியல் எங்கு பிழை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறதோ அதை ஆன்மீகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று The Universe in a Single Atom என்ற அவரது ஆங்கில நூலில் குறிப்பிடுகிறார். இவர் தியானம் குறித்த பரிசோதனைக்கூட ஆராய்ச்சிகளிலும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1922 – முன்னாள் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் ஆறாம் மெஹ்மெட் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான். * 1933 – ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது. * 1939 – செக் நாட்டில் நாசி எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். * 1950 – 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15-வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார். * 1968 – அலெக்சாண்ட்ரொஸ் பனகோலிஸ் என்பவருக்கு கிரேக்க சர்வாதிகாரி ஜார்ஜ் பப்படொபவுலொசைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

* 1970 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி விசாரணைக்குட்படுத்தப்பட்டார். * 1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற்தடவை ஆகும். * 1970 – டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse-க்கான காப்புரிமம் பெற்றார். * 1989 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29-ல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + five =

*