;
Athirady Tamil News

நோயாளிகள் உடையில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி! மருத்துவமனையில் நடந்த சுவாரசியமான சம்பவம்..!!

0

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இளம் ஜோடி நோயாளிகள் அணியும் உடை அணிந்து மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மைக்கேல் தாம்சன் மற்றும் ஆலியா கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்ய முடிவு செய்து குடும்ப உறுப்பினர்கள் இருவர் காலமானதால், திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரும் கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்து திருமணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்பு மணமகன் மைக்கேலின் தந்தை வில்லியம் அறுவை சிகிச்சைக்காக சன்னிவேல் நகரில் உள்ள பெய்லர் ஸ்காட் அண்ட் ஒயிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

திருமண நாளிற்கு முன்பு வில்லியம் குணமடைய வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்த காரணத்தால் மருத்துவமனையின் அனுமதி பெற்று, பாதிரியாரை மருத்துவமனைக்கு அழைத்து தனது தந்தை முன்னிலையில் மணமக்கள் மற்றும் பாதிரியார் ஆகியோர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உடை அணிந்து மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இதன்போது அங்குள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் இதன் பின்னர் தேவாலயத்திற்கு சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மீண்டும் திருமண சடங்குகளை செய்தனர்.

இது குறித்து ஆலியா “குடும்பத்தில் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் இழப்பிற்கு பிறகு மைக்கேலின் அப்பா திருமணத்தில் இருக்க வேண்டியது மிக முக்கியமானது என நினைத்து எங்கு திருமணம் செய்தாலும் பரவாயில்லை. அவருடைய அப்பா அங்கு இருப்பது முக்கியமானது எனக் கருதி இந்த முடிவை எடுத்தோம்” என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*