பாதுகாப்புச் செயலராக கமால் குணரத்ன நியமனம்!!

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.
இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் குணரத்ன 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.
இந்தப் படைப்பிரிவினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இவரே பொறுப்பானவர் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்.
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குணரத்ன, 2001 ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், 523, 551 ஆவது பிரிகேட்களினதும், வான்வழி தாக்குதல் படைப்பிரிவினதும் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். பின்னர், 55ஆவது, 53ஆவது டிவிசன்களி்ன் கட்டளை அதிகாரியாக இருந்தார்.
35 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் முதலாம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
இதனிடையே இவர் எழுதிய, நந்திக்கடலுக்கான பாதை நூல் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமானது. அதில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறுதி – நடத்தையை வெகுவாகப் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பை இழந்துள்ளனர் – விநாயகமூர்த்தி முரளிதரன்!!
7ஆவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.!! (படங்கள்)
பாராளுமன்ற தேர்தல் ! இன்றைய தினம் இறுதி முடிவெடுக்க பாராளுமன்றக் குழு கூடும்!!