;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள்!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத்துறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதனால் இறுதி ஆண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத்துறை மூத்த விரிவுரையாளர் ஒருவருக்கெதிராக அதே துறையில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

உயிரியல் விஞ்ஞானத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவர் பெரும் விதி மீறல்களில் ஈடுபட்டுவருகிறார் எனவும், அவர் தன் அதிகாரங்களை முறைகேடு செய்கிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அவற்றை நேர்மையான முறையில் விசாரணை செய்து மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கடந்த ஜுன் 28 ஆம் திகதி விஞ்ஞான பீடாதிபதியூடாகவும், ஜுலை 05 ஆம் திகதி நேரடியாகவும் யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் தகுதி வாய்ந்த அதிகாரி வேண்டுமென்றே தன்னுடைய கோரிக்கை மீது கரிசனை கொள்ளவில்லை என்றும் அதனால் உயிரியல் விஞ்ஞானத்துறை இறுதி ஆண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தடங்கல்கள் ஏற்பட்டிருப்பதனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உடனடியாகத் தலையிட்டு மாணவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்றும் உயிரியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் ஒருவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டில் கோரியிருக்கிறார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 5 =

*