பாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
அந்த கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அத தெரணிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (19) நடைபெற்ற அந்த கட்சியின் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்றம் தொடர்பில் பிரதமர் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர்கள் தனித்தனியாக தமது அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகுவது ஏற்புடையது அல்ல எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.