;
Athirady Tamil News

அம்பாறை கடற்றொழில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!! (படங்கள்)

0

காலநிலை மாற்றங்கள் காரணமாக கடந்த சில தினங்களாக மீன் பிடி குறைவடைந்துள்ளமையினால் அம்பாறை மாவட்ட கடற்றொழில் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள மீனவர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர் ,பாண்டிருப்பு ,பெரியநீலாவணை ,சாய்ந்தமருது, ஒலுவில் ,பொத்துவில் ,போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம் நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக இவ்வாறான காலநிலையே நீடித்து வருவதானால் பெரும் நஸ்டத்திலேயே வாழ்க்கை செலவுகளை நடார்த்தி வருவதாகவும் தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து கடலுக்கு சென்று வெறும் கையோடு கரை திரும்புவதால் வலை இழுக்க யாரும் வருவதில்லை எனவும் இதனால் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புறுவதாக கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − one =

*