;
Athirady Tamil News

சிகப்பு, மஞ்சள், பச்சைக்கு இடையில் நீல நிறத்தில் புதிய சிக்னல் : மும்பை சகோதரிகள் கண்டுபிடிப்பு..!!!

0

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பெருநகரங்களில் காற்று மாசுபாட்டின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று தரத்தின் அளவு மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளது.

வாகனங்களில் இருந்து வெளியிடப்படும் புகை, தொழிச்சாலைப்புகை போன்ற பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த சில நிறுவனங்களும் தனிநபர்களும் தங்களால் முடிந்த திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை அரசுக்கு ஆலோசனைகளாக வழங்கி வருகின்றனர்.

கோப்பு படம்

இதற்கிடையில், மும்பையின் ஹட்கோபர் பகுதியை சேர்ந்த ஷிவானி கோட் மற்றும் ஈஷா கோட் என்ற சகோதரிகள் வாகனங்களிலில் இருந்து வெளிவரும் புகையால் ஏற்பட்டுவரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மேற்கொண்ட ஆய்வின்படி, ’சாலையில் உள்ள ஒரு சிக்னலில் இயக்கநிலையில் நின்று கொண்டிருக்கும் வாகனங்களால் ஒரு நாளைக்கு 156 லிட்டர் எரிபொருள் வீணாகிறது. மேலும், அந்த வாகனங்களில் இருந்து 371 கிலோ அளவிற்கு நச்சுத்தன்மை மிக்க கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியிடப்படுகிறது’ என்ற தகவலை கண்டுபிடித்தனர்.

இதனால் ஏற்படும் காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்த திட்டம் தீட்டிய சகோதரிகள் சிகப்பு, மஞ்சள், பச்சை என இதுவரை மூன்று நிறங்களில் மட்டுமே போக்குவரத்து சிக்னல் விளக்குகள் நடைமுறையில் உள்ள நிலையில் புதிதாக நீல நிற விளக்கை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சகோதரிகளின் புதிய கண்டுபிடிப்பு

சிக்னலில் சிகப்பு நிறம் விழுந்த உடன் 10 நொடிகள் இந்த நீல நிற விளக்கு ஒளிரும். அதற்குள் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் இயக்கத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.

சிக்னல் சிகப்பில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறுவதற்கு 10 நொடிகளுக்கு முன்னர் மீண்டும் அந்த நீல நிறம் ஒளிரும். அப்போது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை இயக்க நிலைக்கு கொண்டுவர வேண்டும்.

இந்த நடைமுறையால் எரிபொருள் சேமிக்கப்படுவது மட்டுமல்லாமல் வாகனங்களில் இருந்து புகையாக வெளியாகும் கார்பன் டை ஆக்சைட் அளவும் குறையும். இதனால் காற்று மாசுபாட்டின் அளவு வெகுவாக குறையும் என இந்த நடைமுறையை கண்டுபிடித்த சகோதரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் சுதிர் ஸ்ரீவத்சா, ‘காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பொதுமக்கள் கொண்டுவரும் புதிய திட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சி அழிப்பதாக உள்ளது.

போக்குவரத்து சிக்னலில் நீல நிறத்திலான புதிய விளக்கை அறிமுகப்படுத்துவது நல்ல திட்டம்தான். ஆனால் போக்குவரத்து விதிகள் மிகவும் சிக்கனால நடைமுறையில் உள்ளதால் நாம் இதை போக்குவரத்து மேலாண்மையுடன் இணைத்துதான் செயல்படுத்த முடியும்’ என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 5 =

*