பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மாதிரிகள்!! (படங்கள்)
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையிலும் A9 வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகக்கட்டுப்பாடுகளை குறைக்கும் முகமாகவும் அவற்றை கட்டுப்படுத்தும் வகையிலும் A9 வீதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மாதிரிகள் இன்று முற்பகல் வழங்கப்பட்டன.
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வீதிவிபத்துக்களை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கையாக வீதிப்பாதுகாப்பு வாரம் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பதிக்கு முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் A9 வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகக்கட்டுப்பாடுகளை குறைப்பதற்காகவும் அவற்றை கட்டுப்படுத்தும் வகையிலும் இன்றைய தினம் பளை , கிளிநொச்சி , புளியங்குளம் , மாங்குளம் , கனகராயன் குளம் ஆகிய A9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றை வீதிகளில் பொருத்துவதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தமுடியும்.
இதன் முதற்கட்டமாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.செவ்வேள் அவர்களும் வடமாகாண ஆளுநர் அவர்களின் போக்குவரத்திற்கு பொறுப்பான விசேட செயலணியும் இணைந்து குறித்த பொலிஸ் மாதிரிகளை குறித்த பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் கையளித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”