;
Athirady Tamil News

யாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்!! (படங்கள்)

0

யாழ். இணுவில் மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்கள் அண்மையில் சுழிபுரம் தொல்புரத்திலுள்ள முதியோரில்லம் சென்று அங்குள்ள முதியோர்களுடன் நீண்டநேரம் அளவளாவி அவர்களை மகிழ்வித்துள்ளனர்.

மேற்படி கல்லூரியில் கல்வி பயிலும் 54 வரையான உயர்தர மாணவ- மாணவிகளும், ஐந்து ஆசிரியர்களும் இணைந்து தொல்புரம் சிவபூமி முதியோரில்லத்திற்குப் பேருந்தொன்றில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

முதியோரில்லத்தில் வாழ்ந்து வரும் முதியோர்களுடன் மாணவ, மாணவியர் அன்பாக அளவளாவியும், பாட்டுப் பாடியும் அவர்களை மகிழ்வித்துள்ளனர். அத்துடன் தாம் எடுத்துச் சென்ற சிற்றுண்டிகளையும் அவர்களுக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து முதியோர்கள் சார்பில் மாணவர்களுக்குத் தேநீர் பரிமாறப்பட்டது.

இதேவேளை, மூத்தோர்களுக்கும்- இளையோருக்குமான இடைவெளி அதிகரித்து வரும் தற்காலத்தில் இணுவில் மத்திய கல்லூரி மாணவர்கள் ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும், இளையோருக்கும் முன்னுதாரணமாகச் செயற்பட்டமையை மூத்தோர்கள் பலரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வரும் மேற்படி மத்தியகல்லூரியின் பழைய மாணவன் ப. தவேந்திரன் மாணவர்களின் முதியோர் இல்லத் தரிசனத்துக்கான நிதி அனுசரணையை வழங்கி உதவியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − seven =

*