;
Athirady Tamil News

கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை பெறுபேறுகள் வௌியானது!!

0

2019 வருடத்திற்கான மதிப்பீடு மூலம் புள்ளிகள் பெற்றுக் கொடுக்கும் முறையின் கீழ் இடம்பெற்ற கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சையின் இறுதிப் பெறுபேறுகள் இன்று (22) வௌியிடப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெறுபேறுகளை www.slbfe.lk என்ற வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த பரீட்சை 2019 மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அது 2019 ஆம் ஆண்டு ஒக்டொபர் மாதம் 08 ஆம் திகதி வரை ஒன்லைன் (Online) முலம் இடம்பெற்றது.

இந்த பரிட்சையில் 3,319 பேர் தோற்றியிருந்த நிலையில் அதில் 2,411 பேர் சித்தியடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 12 =

*