;
Athirady Tamil News

பிரீமா நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கை!!

0

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் தினத்தில் இது தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தம் தொடர்பில் அனைத்து பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரீமா நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*