;
Athirady Tamil News

ரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து!!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடித மூலம் அவர் இந்த வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும், சமாதானம் நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்காகாகவும், இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அமெரிக்க தூதுவர் அலியானா டெப்பிளிட் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்; ஜனாதிபதி கோட்;டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தார். அவருடன் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகீராவும் ஜனாதிபதியை இன்று ஜனாதிபதி அலுவலகத்ததில சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

அமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 11 =

*