;
Athirady Tamil News

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து!!

0

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பலமாக முன்னெடுத்துச் செல்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருக்கமான உறவுகளை பேண எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் இவர் வாழ்த்தை தெரிவித்திருப்பதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆலயம் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது இலங்கை அடைந்திருந்த முன்னேற்றங்களை இம்ரான் கான் பாராட்டியுள்ளார். இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக இலங்கை பிரதமருடன் நெருக்கமாக இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாள பிரதமர் சர்மா ஓலி, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஸீர் ஆகியோரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 5 =

*