;
Athirady Tamil News

10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!!

0

ராஜகிரிய பகுதியில் 10 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் சந்தேகநபர்கள் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

24 வயதுடைய இளைஞர் ஒருவரும் 31 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 9 =

*