;
Athirady Tamil News

முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி !!

0

முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற தி.மு ஜயரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

முன்னாள் பிரதமரின் பூதவுடல் இன்று (22) பாராளுமன்ற வளாகத்திற்கு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் பூதவுடலுக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

பிற்பகல் 1.00 மணி தொடக்கம் 3.00 மணி வரை முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற தி.மு ஜயரத்னவின் பூதவுடல் பாராளுமன்ற உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − ten =

*