;
Athirady Tamil News

கொழும்பு மாநகரசபையின் நிர்வாக சீர்கேடு தொடர்பில் நடவடிக்கை – ஜனாதிபதி!!

0

கொழும்பு மாநகரின் கழிவகற்றல் மற்றும் மாநகரசபையின் நிர்வாக சீர்கேடு தொடர்பில் கிடைத்த பல முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

இதற்காக அவசர சந்திப்புக்கு வருமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்காவுக்கு ஜனாதிபதியிடமிருந்து விசேட பணிப்புரை சென்றிருப்பதாக அறியமுடிந்தது.

ஏற்கனவே பெருமளவு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கொழும்பு மாநகர சபை ,நிர்வாக சீர்கேடுகளால் மேலும் பல இழப்புகளை சந்தித்து வருவதாகவும் கழிவகற்றல் பணி முறையாக நடக்காத காரணத்தினால் மாநகரத்தின் அழகும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேயரிடமிருந்து முறையான பதில் கிடைக்காத பட்சத்தில் விசேட ஆணையாளர் ஒருவரை நியமித்து மாநகர நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தேசித்திருப்பதாக அறியமுடிந்தது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*