;
Athirady Tamil News

ராஜபக்சக்களின் அரசுக்கு ஒத்துழைக்கத் தயார் – கூட்டமைப்பு!! (வீடியோ)

0

இந்தியாவுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்கும் நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி, காணி விடுவிப்பு, இளையோருக்கான வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.

இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

புதிய அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கும் போது நாம் அவற்றுக்கு எதிப்புத் தெரிவிக்கமாட்டோம்.

ஏற்கனைவே இடைநடுவில் நிற்கும் புதிய அரசியலமைப்புத் தயாரிப்பை முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நாம் ஆதரவளிப்போம்.

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு அவர்கள் இந்தியாவுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் நாம் ஆதரவளிப்போம்.

புதிய அரசின் ஒவ்வொரு செற்பாட்டையும் அவதானித்து ஆதரவளிப்பதா எதிர்ப்பதா என்று முடிவெடுப்போம்.

எமது பிரச்சினைகள் தொடர்பில் நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். அவை தொடர்பில் புதிய அரசுக்கும் தெரியும். அரசியல் தீர்வு பிரதானமானது. அன்றாடப்பிரச்சினைகளும் மிக முக்கியமானவை.

மிக முக்கியமான விடயங்கள் மூன்றை முன்வைத்துள்ளோம். அவற்றுக்குத் தீர்வு காணப்படவேண்டும். இன்னும் பலவற்றுக்குத் தீர்வு காணப்படவேண்டும்.

அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி துரிதமாகக் கிடைக்கவேண்டும். குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோரில் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது எனக் கண்டறியப்படவேண்டும். அவர்களது உறவினர்களின் வாழ்க்கை காலதாமதமின்றி முன்னெற்றப்படவேண்டும்.

இராணுவத்தினரின் பிடிக்குள் தற்போதும் இருக்கும் பொதுமக்களின் காணிகள் விடுவிகப்படவேண்டும்.

அத்துடன், எமது இளையோரின் வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தியும் மிக முக்கியமான விடங்களாகவும். அவற்றுக்கும் நாம் புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

புதிய அரசாங்கத்தின் நற்செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*