;
Athirady Tamil News

வவுனியா பூவரசன்குளம் பாடசாலை மாணவன் வரலாற்று சாதனை!! (படங்கள்)

0

வவுனியா பூவரசன்குளம் பூவரசு ஆரம்ப பாடசாலையின் மாணவன் தொடர்ச்சியாக பாடசாலைக்கு சமூகமளித்து வராலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

வவுனியா வேலங்குளம் கோவில்மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் தரம் ஒன்றில் இருந்து 5 ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில் தினமும் பாடசாலைக்கு 100 வீதமான வரவினை அடைந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தனது வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் துரம்வரை நடந்துசென்று மீண்டும் 7 கிலோமீட்டர் துரம்வரை பேருந்தில் பயனம் செய்து இவ்மாணவன் பாடசாலைக்கு சென்றுள்ளான்;.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆண்டு வரை ஐந்து வருடங்கள் தொடர்சியாக பாடசாலைக்கு சென்று சாதனை செய்தமைக்காக நேற்றயதினம் 29.11 இம் மாணவன் பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.

குறித்த மாணவனின் தந்தை ஊடகவியலாளராவும் தாயார் தனியார் வைத்தியசாலையிலும் பணியாற்றி வரும் நிலையில் வறுமை நிலையிலும் தனது கல்வியை ஆர்வத்துடன் முன்னெடுத்த இம் மாணவன் சுகவீனம் ஏற்பட்டாலும் அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் மருந்து பெற்றபின்னர் பாடசாலைக்கு சென்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறான சாதனை படைத்த மாணவனை நான் எனது சேவைக்காலத்தில் காணவில்லை. ஒரு நாள் கூட பாடசாலைக்கு வராமல் அவரது வரவு 100 வீதமாக காணப்படுகின்றது. இம் மாணவனை நினைத்து நான் மகிழ்வடைவதுடன் பாடசாலை சமூகமும் சந்தோசமடைகின்றது.
இவ்வாறான முன்மாதிரியான மாணவன் எமது மாவட்டத்திற்கு கிடைத்தமை எமது மண்ணுக்கும் பெருமையாகும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − nine =

*