லண்டன் பேருந்தில் முத்தமிட மறுத்த பெண் ஓரினச்சேர்க்கையாளருக்கு நேர்ந்த கதி! வெளியான முக்கிய தகவல்.!!!

லண்டன் பேருந்தில் பயணித்த ஓரினச்சேர்க்கை தம்பதிகளான பெண்கள் முத்தமிட மறுத்ததால் அவர்களை கொடூரமாக தாக்கிய வழக்கில் மூன்று பேர் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர்.
லண்டன் பேருந்தில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி Melania Geymonat (28) மற்றும் Chris Hannigan ஆகிய இரண்டு பெண்கள் பயணம் செய்தார்கள்.இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆவார்கள்.
அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதை கண்டுபிடித்த பேருந்தில பயணம் செய்த 15 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் அவர்கள் இருவரையும் முத்தமிட்டுக் கொள்ளுமாறு கூறி, தாங்கள் அதைப் பார்த்து ரசிக்க விரும்புவதாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக முத்தமிட விரும்பாத Melania மற்றும் Chris ஜோடி அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதனால் கோபமடைந்த மூவரும் சேர்ந்து Chrisஐ தாறுமாறாக தாக்க, தடுக்கச் சென்ற Melaniaவுக்கும் சரமாரியாக அடி விழுந்திருக்கிறது.
முகமெல்லாம் இரத்தமாக, பேருந்தை விட்டு இறங்கும் நேரத்தில் அங்கிருந்த பொலிசாரிடம் Melania புகாரளித்தார்.இதையடுத்து மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து இன்னொரு 17 சிறுவன் மீதும் பொலிசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியது.அப்போது மூன்று சிறுவர்களும் தங்களது குற்றத்தை ஒப்பு கொண்டனர்.
இதில் தொடர்புடையதாக கூறப்பட்ட 17 வயது சிறுவன் மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் அவனை விடுவித்தது.
இதை தொடர்ந்து குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மூவருக்கும் அடுத்த மாதம் 23ஆம் திகதி தண்டனை விபரம் அறிவிக்கப்படவுள்ளது
#NoPlaceForHate | "No one should be victimised because of their sexuality"
Three teens have pleaded guilty after a violent homophobic incident on a bus. Following lewd gestures, a fight ensued and the female victims were punched repeatedly in the face
👉 https://t.co/PSGjQzcdgI pic.twitter.com/HfFfJPgl22
— Metropolitan Police (@metpoliceuk) November 28, 2019