;
Athirady Tamil News

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!!

0

2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மகமூத் குர்ஸ்சி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவர் நேற்று (01) இரவு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்தாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், பிதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் மேலும் பல உயர் அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்த நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அதிதிகள் மேடையில் உரையாற்றிய அவர் இந்த விஜயம் முக்கியதுவமிக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் இம்ரான் கானின் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாகவும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − six =

*