யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் பொறுப்பேற்பு!! (படங்கள்)
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனாரத்ன பதவியேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார்.
பொலிஸ தலைமையக்கதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ராஜித, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”