;
Athirady Tamil News

ஈரான் நாட்டுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்கா நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் பணியை விரைவு படுத்தியது. சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும், எதிரிகளின் சதி முறியடிக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினும் ஈரானின் மிரட்டல் குறித்து நேற்று வெள்ளை மாளிகையில் கலந்தாலோசித்தனர். ‘ஈரான் நாட்டின் மிரட்டல் குறித்தும் அதே வேளையில் இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது’ என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினும் கடந்த மாதம் 19 தேதியும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, கோலன் ஹைட்ஸ் பகுதியை இறையாண்மை கொண்ட இஸ்ரேல் பிரதேசமாக இணைத்ததன் மூலம், இரு வலதுசாரி தலைவர்களுக்கிடையேயும் வலுவான உறவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…!!!

0

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஐ.எஸ் , அல்-கொய்தா போன்ற பயங்கராவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனால் ராணுவமும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை’ என அந்நாட்டு உள்ளூர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பர்கினோ பாசோ நாட்டின் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*