;
Athirady Tamil News

சில பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!!

0

வத்தள – ஹேகித்த வீதியில் அமைந்துள்ள பிரதான நீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஹேகித்த, பள்ளியவத்த, எலகந்த, பலகலவத்த, மரதான வீதி, வெலிஅமுண, எலகந்த வீதியின் ஒரு பகுதி மற்றும் ஹெந்தல வீதி ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழாயை சீர் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*