;
Athirady Tamil News

நாமக்கல் அருகே கடன் தொல்லையால் ரிக் வண்டி உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை..!!!

0

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 57). இவர், ஆள்துளை கிணறு போடும் ரிக் லாரி வைத்துள்ளார். இவருடைய மனைவி நிர்மலா (47). இவர்களது மகள் சவுமியா (21). இவர் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், மோகனுக்கு ரிக் வண்டி தொழிலில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. சரியாக ரிக் வண்டி ஓட்டம் இல்லாததால் ரிக் வண்டிக்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியவில்லை. மேலும் கடன் சுமை அதிகரித்தது. இதனால் வட்டி அதிகரித்து கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

பணம் கொடுத்தவர்கள், பணத்தை கட்டுமாறு கூறி மோகனுக்கு தொல்லை மற்றும் நெருக்கடி கொடுத்தனர். இது குறித்து தனது மனைவி நிர்மலாவிடம் மோகன் தெரிவித்து, நம்மால் கடனை கட்ட முடியாது. அதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதையடுத்து 3 பேரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று அதிகாலையில் மோகன், நிர்மலா, சவுமியா ஆகிய 3 பேரும் வீட்டில் வைத்து விஷம் குடித்தனர்.

இதில் விஷம் உடல் முழுவதும் பரவி மோகன், நிர்மலா ஆகிய இருவரும் மயக்கம் அடைந்தனர். சவுமியா உடனடியாக தனது செல்போனை எடுத்து சித்தப்பா அன்பழகனுக்கு தொடர்பு கொண்டு, கடன் தொல்லையால் நாங்கள் 3 பேரும் விஷத்தை குடித்து விட்டோம் என கூறினார்.

உடனே அன்பழகன் மற்றும் உறவினர்கள் பதறியபடி அங்கு ஓடி வந்தனர். 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருச்செங்கோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக சவுமியாவை மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மோகன், நிர்மலா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + twelve =

*