;
Athirady Tamil News

அமர்வை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கோத்தாபய!!

0

நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஒப்பமிட்டுள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

அதன்படி நாளை நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதியின் கட்டளையால் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இந்தக் கட்டளை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி புதிதாகத் தெரிவாகிய நிலையில் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுவது பாரம்பரியமாக உள்ளது. அதனடிப்படையில் நாளைய அமர்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் திகதி ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டதும் முதலாவது அமர்வில் அவர் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக் கிடைத்துவிட்டதாகவும் அதனை அச்சிடும் பணி துரிதமாக இடம்பெறுவதாகவும் அரச அச்சகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 19 =

*