பிரபல உணவகத்தின் கழிப்பறையில் இருந்த ரகசிய கமெரா! சாதுர்யமாக கண்டுபிடித்த 8 வயது சிறுமி.. சிக்கிய சிறுவன்..!!!

அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தின் கழிப்பறையில் செல்போன் மூலம் ரகசியாக வீடியோ எடுக்கப்படுவதை 8 வயது சிறுமி சாதுர்யமாக கண்டுபிடித்துள்ளார்.நியூயோர்க்கின் சீபோர்ட் பகுதியில் அமைந்துள்ளது ஒரு பிரபல உணவகம்.
இங்கு நேற்று முன் தினம் இரவு 8.20 மணிக்கு 8 வயது சிறுமி தனது உறவினருடன் வந்தார்.
அப்போது உணவகத்தில் இருந்த பெண்கள் கழிப்பறைக்குள் சிறுமி சென்ற போது தன்னை நோக்கி செல்போன் இருப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து சுவர் அருகில் சென்று பார்த்த போது செல்போன் அங்கிருந்ததும், அதன் கமெரா அங்கு நடப்பதை பதிவு செய்து வருவதும் தெரியவந்தது.
இது குறித்து சிறுமி அளித்த தகவலில்ன் பேரில் பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
விசாரணையில் 17 வயதான ஊழியர் தான் கழிப்பறையில் செல்போனை நைசாக வைத்து வீடியோ எடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் அவனை கைது செய்தனர், மேலும் செல்போனை ஆராய்ந்ததில் பெண்கள் அந்த கழிப்பறையை பயன்படுத்தும் போது எடுக்கப்பட்ட காட்சிகள் அதில் இருந்தன.
இதில் தாங்கள் பாதிக்கப்பட்டதாக உணரும் பெண்கள் தங்களின் துப்பறிவு பிரிவு பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்