;
Athirady Tamil News

கஞ்சிபான இம்ரானின் சிறைக் கூண்டிலிருந்து அலைபேசி மீட்பு !!

0

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாதாளக்குழுவொன்றின் உறுப்பினரான, கஞ்சிபான இம்ரானின் சிறைக் கூண்டிலிருந்து, (2) அதிகாலை, அலைபேசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் தலைமையகத்தின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே, இந்த அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிபான இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டில் பாதுகாப்பு கமெரா ​ஒன்று பொருத்தப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒததுழைப்புடன் இந்த அலைபேசி இம்ரானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என சந்​தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 7 =

*