;
Athirady Tamil News

யாழ்.நகரில் மிதிவெடி மீட்பு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள தொடருந்துக் கடவைக்கு அருகாமையில் உயிர்ப்புள்ள மிதிவெடி ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இன்று காலை மிதிவெடி ஒன்று இருப்பதாக பொது மக்களினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் பொலிஸார் அதனை மீட்டனர்.

“அந்த பகுதியில் குப்பைகள் போடப்பட்டிருந்தன. புதையுண்டிருந்த மிதிவெடி மழை காரணமாக வெளிப்பட்டது.

எவ்வாறு இந்த பகுதியில் மிதிவெடி வந்ததென்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*