;
Athirady Tamil News

ஒழுக்க விதிகளை மீறியவர்களின் கட்சி உறுப்புரிமை ரத்துச் செய்யப்படும்!!

0

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் ஒழுக்க விதிகளை மீறிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று (02) பிற்பகல் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஏ.எச்.எம். பௌசியின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்யும் கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும், நீதிமன்றம் செல்வதென்றால் அவருக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல், எரிபொருள் விலை சூத்திரத்தை ரத்துச் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ள போதும், அந்த தீர்மானம் அமைச்சரவையின் பரிந்துரைகளின் படி செயற்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த அரசாங்கம் விலை சூத்திரத்தை பயன்படுத்தி மாதாந்தம் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது போல தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*