;
Athirady Tamil News

யாழ். பழமை வாய்ந்த மடம் இடிந்து வீழ்ந்துள்ளது..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் – கோண்டாவில் ஆசிமட அரசடி விநாயகர் ஆலயத்தின் முன்பாக இருந்த பழமை வாய்ந்த மடம் மழை காரணமாக இடிந்து வீழ்ந்துள்ளது.

நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாகவே இந்த மடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த மடமானது பல வருடங்களுக்கு முன்னர் ஆலயத்திற்கு வருபவர்கள், அப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வீதியால் சென்று வருபவர்கள் இளைப்பாறுவதற்கான அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த மடத்தினை ஆலய நிர்வாகம் தொடர்ந்து உரிய முறையில் பராமரித்து வந்திருந்த போதும், கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர்ச்சியான மழையால் அம்மடம் இடிந்து வீழ்ந்துள்ளது.

பழமைவாய்ந்த இந்த மடத்தினை மீண்டும் அதே இடத்தில் அமைக்க போவதாக அரசடி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 3 =

*