;
Athirady Tamil News

திருவண்ணாமலை அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை..!!!

0

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 65), விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு பிரேம்குமார் (26) என்ற மகன், லாவண்யா என்ற மகள் உள்ளனர். லாவண்யாவுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

கணேசனுக்கு சொந்தமான விவசாய நிலம் அவலூர்பேட்டை சாலை ஆர்ப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் உள்ளது. கிராமத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் இந்த விவசாய நிலம் உள்ளது. கணேசன் விவசாய நிலத்தில் வீடு கட்டி தனது மனைவியுடன் தங்கி விவசாயம் செய்து வந்தார். இவர்களது வீட்டின் அருகே ஆங்காங்கே ஒருசில வீடுகள் உள்ளது.

கணேசன் வழக்கம் போல் வீட்டின் வெளியே நேற்றிரவு கயிற்றுக்கட்டிலில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென கணேசனின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு உள்ளே படுத்திருந்த அவரது மனைவி மகேஸ்வரி அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்தார்.

கணேசன் கழுத்து பகுதியிலும், மார்பு பகுதியிலும் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இதில் துடிதுடித்த அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி கதறி அழுதார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் கொலை கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − sixteen =

*