;
Athirady Tamil News

மிரிஹான தடுப்பு முகாமில் இருந்து பல்வேறு பொருட்கள் பறிமுதல்!!

0

குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி இந்நாட்டுக்கு வருகை தந்த போது கைது செய்யப்பட்ட வௌிநாட்டவர்களை தடுத்து வைத்துள்ள மிரிஹான தடுப்பு முகாமில் இன்று (05) விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த வௌிநாட்டவர்களிடம் இருந்து 75 கைப்பேசிகள், 5 மடிக்கணனிகள் மற்றும் 156,000 ரூபா பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் காயன் மிலிந்த அத தெரணவிற்கு தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தடுப்பு முகாமில் 118 வௌிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 55 பேர் நைஜீரியா நாட்டவர்கள் எனவும் காயன் மிலிந்த மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*