;
Athirady Tamil News

பண்டிகை காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள் !!

0

ஜனாதிபதி உள்ளிட்ட பிரபுக்களின் கொலை சூழ்ச்சி தொடர்பில் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் கமல் குணரத்னவும் கலந்து கொண்டிருந்தார்.

சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற 75 மில்லியன் ரூபா பெறுமதியான 187 மோட்டார் சைக்கிள்களை நாடு பூராகவும் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன நாட்டு தூதுவரும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, பிரபுக்களின் கொலை சூழ்ச்சி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், அது தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளதாகவும், பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படாதவாறு இராணுவம் மற்றும் பொலிஸார் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், எதிர்வரும் பண்டிகை காலத்தில் பாதுகாப்பினை உறுதிச் செய்யும் பொறுப்பு, அரசினுடையது எனவும் அதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் தற்போதைய நிலையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*