;
Athirady Tamil News

இராஜாங்க அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!!

0

இராஜாங்க அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, புதிய முறையில் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர் கல்வித் துறையைச் சார்ந்தோர் மற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான கல்வி மூடிய சேவை ஒன்றை ஸ்தாபிக்கும் முக்கியத்துவம் அரசினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விடயங்களை மதிப்பீடு செய்து ஆலோசனை ஒன்றைத் தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் விடயத்துடன் தொடர்புபட்ட நீடித்த அனுபவம் மிக்க புத்திஜீவிகளுடனான குழு ஒன்றை நியமிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 8 =

*