;
Athirady Tamil News

தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தயார் – ரஞ்சன் ராமநாயக்க!!

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அடுத்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை எனக்கு வழங்கப்படக்கூடாது என்று சில ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தலமையிடம் கோரியுள்ளதாகக் கூறினார்.

இந்த விடயத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாகவும், எனினும் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச வேட்புமனுவை வழங்குவதாக தனக்கு உறுதியளித்திருந்தார் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடத் தனக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் சுயேட்சையாக போட்டியிட தான் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு பொதுமக்கள் தன்னை நிராகரித்தால் அவர் நடிகராக வாழ்க்கை தொடரும் என்றும் ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + eight =

*